பெண்களுக்கு ஆண்களை விட இதய நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வு ஒன்றினில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதய நோய்
இன்றைய பரபரப்பான காலத்தில் மக்கள் தங்கள் வேலைப்பளு காரணமாக பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் நிலையில், நோய்களும் அவர்களை அசுர வேகத்தில் தாக்கவும் செய்கின்றது.
சாதாரண தலைவலி, காய்ச்சல் என்று இல்லாமல், இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் என்று உயிரை விரைவில் பறிக்கும் நோய்கள் தான் அதிகமாக தாக்குகின்றது.
இளம் தலைமுறையினர், குழந்தைகள் உட்பட பலரும் தற்போது இதய நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆய்வு ஒன்றில் ஆண்களை விட பெண்களுக்கு இதய நோய்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் பெண்கள்
பெண்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதுடன், சிகிச்சையை தாமதப்படுத்தாமலும் இருக்க வேண்டும்.
அறிகுறிகள் தோன்றிய பின்பு பெண்கள் தாமதமாக மருத்துவமனைக்கு செல்வதாகவும், 1995-2014 காலக்கட்டத்தில் 35-54 வயது பெண்களிடையே மாரடைப்பு 21 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 31 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெண்கள் ஆண்டுதோறும் கட்டாயம் உடல்பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதும், அறிகுறிகள் தோன்றியவுடன் உடனடியாக மருத்துவரை அணுகுவதும் மிகவும் அவசியம்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் தீவிர பாதிப்புகளை தவிர்க்க முடியும்.







