இந்தியாவின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஊடுருவி நிற்கும் சீனா… விரட்டியடிப்பார்களா மக்கள்?

china

 

 

 

 

 

 

 

 

 

டெல்லி: எல்லையை விட்டு சீன ராணுவத்தை விரட்ட இந்தியா போராடி வரும் நிலையில் நம் வீட்டை ஆக்கிரமித்திருக்கும் சீன பொருள்களையாவது நாம் விரட்டியடிப்போமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த பகுதி பூடானுக்கு சொந்தமானது என்றாலும் அது நமது ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது.

இதனால் டோக்லாம் பகுதியில் சீனா சாலை போடும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். பூடான் விஷயத்தில் இந்தியா தலையிட கூடாது என்று சீனா அடாவடித்தனம் செய்கிறது.