இலங்கையில் மீண்டும் அனர்த்த எச்சரிக்கை: அவதானமாக செயற்படுமாறு அறிவிப்பு

war

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அகலவத்தை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அகலவத்தை பிரதேசத்தில் நேற்றைய தினம் கடும் மழை பெய்துள்ளதன் காரணமாகவே மண்சரிவு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் அகலவத்தை பிரதேசத்தில் 100 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

இதேவேளை குக்குலே கங்கையின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதனை அண்டிய பிரதேச மக்களையும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் எனவும், தென் மாகாணம் மற்றும் பிபில பிரதேசத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.