இன்று ஞாயிற்றுக்கிழமை கோட்டை மற்றும் அதனை அண்டிய இடங்களில் 12 மணித்தியால நீர்வெட்டு நிலவும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. முக்கியமான திருத்தப் பணி ஒன்றுக்கமைவாகவே குறித்த நீர் வெட்டு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டார நாயக்க புர, கொஸ்வத்த மற்றும் கோட்டையை அண்டிய இடங்களில் நண்பகல் 2.00 மணியளவில் இருந்து அடுத்த நாள் அதிகாலை 2 மணிவரை நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.