தெற்கு ஜப்பானில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 4 லட்சம் பேர் பாதிப்பு

தெற்கு ஜப்பானில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 4 லட்சம் பேர் தங்கள்  வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேறியுள்ளனர்.

 

இந்த பேரிடரில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், பதினோரு பேர் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

 

குய்ஷு என்ற தீவில் 12 மணி நேரத்திற்குள்ளாக சுமார் 50 செ.மீ மழை பதிவாகியிருந்தது. இது வெள்ள நீரை மேலும் அதிகரித்து வீடுகள் மற்றும் சாலைகளை வாரிச் சென்றுள்ளது.

 

பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு சுமார் 7,000க்கும் அதிகமான மீட்புதவிப் பணியாளர்களை ஜப்பானிய அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். மழையின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்ததாக வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.