இந்தியில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் கணேஷ் ஆச்சார்யா ஒன்றரை வருடத்தில் 85 கிலோ குறைத்துள்ளார்.
கணேஷ் ஆச்சார்யாவின் உடல் எடை 200 கிலோ, இதனால் நடக்கமுடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
எனவே கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து அரை சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார்.
மேலும், உடற்பயிற்சி மையம் சென்று அங்கு அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் கடந்த ஒன்றரை வருடத்தில் 85 கிலோ உடல் எடை குறைத்துள்ளார்.
உடல் எடை குறைந்த பிறகு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கணேஷ் ஆச்சார்யா. இதைக் கண்டு பலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
பார்ப்பவர்கள் எல்லோரும் எப்படி எடையை குறைத்தீர்கள் என்றே கேட்கிறார்களாம். ‘ஒன்றரை வருஷம் அரை சாப்பாட்டைச் சாப்பிட்டு, ஜிம்மே கதின்னு கிடந்து, நான் பட்டபாடு இருக்கே…’ என்று நீண்ட பெருமூச்சு விடுகிறார் கணேஷ் ஆச்சார்யா.








