திருடர்களை பிடிக்க அவகாசம் கோரும் ஜனாதிபதி : முன்னாள் ஜனாதிபதி சாடல்

mahintha

பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலத்தை கொண்டுவர அரசு முயற்சி செய்வதற்கு முக்கிய காரணம் அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருக்கும் கருத்தை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

மகாநாயக்க தேரர்களின் கருத்தை உதாசீனம் செய்யக்கூடாது. நாட்டின் நன்மை கருதியே அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

திருடர்களைப் பிடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று மாத கால அவகாசம் கேட்டிருக்கின்றார். இது பாராட்டத்தக்க முயற்சியாகும் என்று தெரிவித்துள்ளார்.