7 சிறுவர்களை காவு கொண்ட மலவி உதைபந்தாட்ட மைதானம்

மலவி உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற சன நெரிசலில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 7 பேர் சிறுவர்கள் எனவும் இன்னமும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்த நாட்டு பொலீசார் தெரிவித்துள்ளனர் .

அந்த நாட்டின் இரு பெரும் அணிகளுக்கிடையே இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியில் இருக்கைகளை பிடிப்பதற்கான முயற்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டபோழுதே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுமார் நாற்பதாயிரம் பேர் அமரக்கூடிய வசதி கொண்ட Lilongwe’s Bingu தேசிய மைதானம் மூன்று மணி நேரம் கால தாமதமாக திறக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நெரிசல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்றதன் ஐம்பத்து மூன்றாவது அகவையை கொண்டாடும் பொருட்டே இந்த உதைபந்தாட்ட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .