தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மதகு ஒன்றினுள் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மண்டை ஓடு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்த மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸாரும், விசேட தடயவியல் நிபுணர்களும் மேற்கொண்டு வருகின்றனர் குறித்த மனித மண்டையோடு மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் துாரத்தில் மன்னார் பொது மயானம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








