மக்கள் பிரச்சனைகளுக்கு அமைதி… சினிமாவுக்கு மட்டும் குரல் கொடுக்கும் ரஜினி… சரியா இது?

சென்னை: தமிழக அரசு சினிமாவிற்கு விதிக்கும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என தன் டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் மக்கள் பிரச்சனைகளான நெடுவாசல், கதிராமங்கலம், டாஸ்மாக் போராட்டம் என எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை.

நடிகர் ரஜினி காந்த் தன் டிவிட்டர் பக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் சினிமாவை நம்பியுள்ளார்கள். அவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த நிகழ்வில் ‘நாட்டில் சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது’ எனக் கூறினார். அப்போது அதனை வலைதளங்களில் நெட்டீசன்கள் கடுமையாக விமர்சித்து இருந்தனர். அதற்கும் ரஜினி, ‘தமிழர்கள் ஏன் இப்படி கேவலமாக விமர்சிக்கிறார்கள்’ என கேள்வி எழுப்பியிருந்தார்.