மகளிர் உலகக்கோப்பை: 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

மகளிர் உலகக்கோப்பை: 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

டெர்பி:

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் இலங்கை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 78 (110) ரன்களும், கேப்டன் மித்தாலி ராஜ் 53 (78) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை வீராங்கணை ஸ்ரீபாலி வீரக்கொடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இலங்கை அணி சார்பில் திலானி மனோதரா 61 (75) ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜுலான் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் தோற்றதன் மூலம் இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது.

தொடர்ந்து கலக்கி வரும் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில், இங்கிலாந்தை 35 ரன்கள் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 16 ரன்கள் வித்தியாசத்திலும் பந்தாடி புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.