எந்தவொரு கிரிக்கெட் தொடரையும் தவறவிடுவதை நான் விரும்பவில்லை: மைக்கேல் கிளார்க்

எந்தவொரு கிரிக்கெட் தொடரையும் தவறவிடுவதை தான் விரும்பவில்லை என்றும் போட்டி ஒன்றுக்காக வீரர் தயாராவது எவ்வளவு முக்கியம் என்பது தனக்குத் தெரியும் என்றும் அவுஸ்ரேலிய அணி முன்னாள் தலைவர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையினால் முன்னெடுக்கப்பட்ட வீரர்களின் ஒப்பந்த மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அவுஸ்ரேலிய வீரர்கள் கிரிக்கெட் தொடர் ஒன்றுக்கு தயாராகாமல் இருப்பதை நான் விரும்பவில்லை. வீரர்கள் வேறு விஷயத்தில் கவனம் செலுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 12 மாத ஒப்பந்தத்தை நீடித்து வீரர்கள் கிரிக்கெட் மீது கவனம் செலுத்த வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவொரு கிரிக்கெட்டையும் தவற விடுவதை நான் விரும்பவில்லை.

போட்டி ஒன்றுக்கு வீரராக தயாராவது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு நன்கு தெரியும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சொந்த மண்ணில் அவுஸ்ரேலியா தொடரை இழந்துள்ளது.

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் லீக் சுற்றோடு வெளியேற்றப்பட்டுள்ளோம். இந்திய மண்ணில் தொடரை இழந்துள்ளோம். வீரர்கள் தங்களை தயாராகும் பணியில் 100 சதவீதம் கவனம் செலுத்த வேண்டும். கிரிக்கெட்டில் மீண்டும் மேலே வருவது மிகக்கடினம் என்பது நான் நன்கு உணர்வேன்” எனவும் அவர் கூறினார்.