தொடர்ந்து நான்கு அரைசதம்: தெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார் ரகானே

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளது. இதில் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இந்த நான்கு போட்டியிலும் ஒரு சதம், மூன்று அரைசதங்கள் விளாசினார் ரகானே. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் தொடர்ந்து 50 ரன்களுக்கு மேல் நான்கு முறை எடுத்து சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர், மனோஜ் பிரபாகர், விராட் கோலி ஆகியோர் நான்கு முறை அரைசதங்களை தாண்டியுள்ளனர். ஐந்தாவது போட்டியில் அரைசதம் அடித்தால், ஐந்து போட்டிகளில் தொடர்ந்து 50 ரன்களை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார் ரகானே.