வடக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு தனித்தனியா அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மாகாணத்தின் அமைச்சர்களாக நியமனம் பெற்றமையிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். மாகாணத்தின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் மாகாண அமைச்சர் வாரியத்திலும், மாகாண சபையிலும் எனது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாரகவுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.