தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட கர்நாடகா

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கூறிய கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நீர் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

இதில் ஜூன் மாதம் 10.16 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதம் 42.76 டிஎம்சி, ஆகஸ்ட் 54.72 டிஎம்சி, செப்டம்பர் 29.36 டிஎம்சி, அக்டோபர் 30.17 டிஎம்சி, நவம்பர் 16.05 டிஎம்சி, டிசம்பர் 10.37 டிஎம்சி, ஜனவரி 2.51 டிஎம்சி, பிப்ரவரி 2.17 டிஎம்சி, மார்ச் 2.4 டிஎம்சி, ஏப்ரல் 2.32 டிஎம்சி, மே மாதம் 2.01 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

இந்நிலையில், அடுத்த 3 மாதங்களில் 94 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு திறக்கப்படும், நீர் திறந்துவிடுவது அவசியம் என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விஷால், அரசியலை தாண்டிய மனிதாபிமான செயல் என்றும் எனது வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதற்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கொள்வாதாக கூறியுள்ளார்.

முன்னதாக கர்நாடகாவில் நடந்த படவிழாவில் தமிழகத்துக்கு நீர் திறக்க விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.