இலங்கையின் அடுத்த இராணுவத் தளபதி யார்?

இலங்கை இராணுவத்தின் அடுத்த தளபதி பதவிக்கு மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகிய மூவரிடையே பெரும் போட்டி நிலவுவதாக இராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் 15ம் திகதியுடன் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்து எயார் மார்ஷல் கோலித குணதிலக ஓய்வு பெற்ற பின்னர் இராணுவத் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டு இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தநிலையில் அடுத்த இராணுவத் தளபதிக்கான பதவி வெற்றிடத்திற்கு மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோரில் ஒருவர் இராணுவத் தாளபதியாக நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் மூவரிலும் அனுபவ ரீதியாக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்ததாக முறையே மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, மேஜர் ஜெனரல்மகேஸ் சேனநாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

எவ்வாறாயினும் அடுத்த சில நாட்களுக்குள்ளாகவோ அடுத்த சில வாரங்களுக்குள்ளாகவோ கூட இந்த நியமனம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.