கூட்டமைப்புக்கும், இராணுவத்துக்கும் இடையில் யாழில் நாளை முக்கிய பேச்சு!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இராணுவத்துக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நாளை முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

காணி விடுவிப்பு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இது இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதி தலைமையிலான இராணுவ அதிகாரிககும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இராணுவத்தின் வசமுள்ள காணிகளின் விடுவிப்பு குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.