பத்து படத்தின் சம்பளத்தை ஒரே படத்தில் பெற்ற நடிகை

காதல் அழிவதில்லை, லாடம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சார்மி. இவர் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வந்தவர்.

இவர் ஒரு பாடலுக்கு நடனமாட ரூ 4 லட்சம் வரை சம்பளமாக பெறுவாராம், ஆனால், இயக்குனர் பூரி ஜெகன்நாத் இவரை தன் படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக நியமித்துள்ளார்.

அவரும் இந்த வேலையை சரியாக செய்ததால், தயாரிப்பாளரிடமிருந்து சார்மிக்கு ரூ 4 கோடி சம்பளமாக பெற்று தந்துள்ளார்.

இவர் 10 படம் நடித்தால் தான் இந்த சம்பளத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.