சிறுவயது தோழியை கரம்பிடித்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி. உலக புகழ்பெற்ற அவர் தனது ஆரம்ப கால தோழியான அண்டோனல்லா ரோகுசோவை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் வசித்து வரும் மெஸ்ஸி தம்பதியினருக்கு தியாகோ (4) ஒரு வயதில் மேடியோ என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சிறுவயதில் தனது தோழியுடன் மெஸ்ஸி

இந்த நிலையில் அண்டோனல்லா ரோகுசோவை முறைப்படி திருமணம் செய்ய மெஸ்சி முடிவு செய்தார். அவர்களது திருமணம் மெஸ்சியின் சொந்த ஊரான ரொசாரியோவில் நேற்று நடைபெற்றது. இதில், முக்கிய கால்பந்து வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

திருமண உடையில் மெஸ்ஸி தம்பதியினர்

திருமண உடையில் அரங்கிற்கு வந்த மணமக்கள் இருவரும் உற்சாகமாக முத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நூற்றாண்டின் சிறந்த திருமணம் இது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.