இன, மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முகநூல் மற்றும் சமூக ஊடகங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

நுவரெலியவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,

“இந்த ஊடகங்களைப் பயன்படுத்தி, நாட்டில் அமைதியற்ற நிலையை தோற்றுவிக்க அடிப்படைவாதக் குழுக்கள் முயற்சிக்கின்றன.

இந்த நிலைமையை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இன, மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா காவல்துறை அண்மையில் எச்சரித்திருந்த நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.