பல மில்லியன் டொலர் செலவில் உருவாகும் சிறிய கனடா

ரொறொன்ரோ தொழிலதிபர் ஜீன்-லூயிஸ் பிசெனிக்மீஜர் மற்றும் அவரது திறமையான மாதிரி அடுக்குமாடி கட்டிட வல்லுநர் அணியினர் இணைந்து சிறிய அளவிலான ஒரு கனடாவை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கனடாவின் 150ஆண்டு நினைவு தினத்திற்கேற்ப ஒட்டாவாவின் நாடாளுமன்ற கட்டிடங்கள் பிரதிபலிக்கும் பணியில் கடந்த பல மாதங்களாக ஈடுப்பட்டனர்.

பிளாஸ்ரிக் மற்றும் இழைப்பலகைகளை உபயோகித்து சுவரில் தெளிவான தண்ணீரை சுமந்து ஊற்றுவது போன்ற சிறிய தோற்றங்களை அமைதி கோபுரத்தின் மேல் உருவாக்கியும் உள்ளனர். இது போன்ற அமைப்பு ஒன்றை தொழிலதிபர் 2011ஆம் ஆண்டு ஜேர்மனியில் கண்ட போது தனக்கு இந்த யோசனை தோன்றியதென தெரிவித்தார்.

கடந்த மூன்று வருடங்களாக இவரும் இவரது சகாக்களும் ஒன்ராறியோவின் தென் பகுதியின் பெரும்பாலானவற்றை கட்டி முடித்துள்ளனர். இந்த மாதிரியில் இயக்கத்தில் இருக்கும் தெருக்கார்கள், ஒரு நிலக்கீழ் ரயில் திட்டம் மற்றும் மைக்கிரோஷிப் கார்கள்-தாமாகவே இயங்கும்-என்பனவும் அடங்குகின்றன.

நெடுஞ்சாலை 401 மேற்கின் குறுகிய ஒரு இயக்கம்- கமில்ரன் மற்றும் வாட்டர்லூ வரையில் இவர்கள் அமைத்துள்ளனர்.நாடாளுமன்ற அமைப்பு முடிவடைந்ததும் ஒட்டாவாவின் மற்றய பகுதிகளும் கட்டப்படும் என தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்திற்கு ஏற்கனவே 4மில்லியன் டொடலர்கள் செலவாகி விட்டதாகவும் இத்திட்டத்தை முடிப்பதற்கு- கனடாவின் கரைக்கு-கரை நகரங்களின் மாதிரியை மீள உருவாக்கும் தனது கனவை பூரணப்படுத்த முதலீட்டாளர்களின் உதவியை நாடுவதாகவும் Brenninkmeijer தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் இந்த அமைப்பை உல்லாச பயணிகளை கவரும் வகையில் மாற்றுவதற்கு ஒரு இடத்தை தேடுவதாகவும் தெரிவித்துள்ளார்.