தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன்

மதுபோதையில் ஏற்பட்ட சண்டையில் சொந்த தம்பியை அடித்து கொலை செய்த சம்பவம் கேகாலையில் இடம்பெற்றுள்ளது.

கேகாலை பகுதியில் மதுபோதையில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, மூத்த சகோதரர் (43 வயது) தனது இளைய சகோதரரை (40 வயது) தடியொன்றினால் தாக்கியுள்ளார்.இதனால், படுகாயமடைந்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளாதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்