இராணுவ சிப்பாய் திருடி விழுங்கிய சங்கிலி வந்தது

புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை பஸ் தரிப்பு நிலை­யத்தின் ஊடாக அமெ­ரிக்க தூது­வ­ரா­ல­யத்தில் பணிக்கு சென்று கொண்­டி­ருந்த யுவதி ஒரு­வரின் தங்கச் சங்­கிலி கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இச் சம்­பவம் நேற்று காலை 6.45 மணிக்கும் 7.15 க்கும் இடைப்­பட்ட மணி­நே­ரத்தில் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் கொள்­ளையில் ஈடு­பட்ட 23 வய­து­டைய இரா­ணுவ வீரரை கைது செய்து அவர் விழுங்­கி­யி­ருந்த குறித்த யுவ­தியின் எழு­பது ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான தங்கச் சங்­கி­லியை மீட்­ட­தா­கவும் பொலிஸ் ஊடக பேச்­சா­ளரும் பொது உற­வுகள் ஒழுக்­காற்று பிரிவு, ஊடக மத்­திய நிலை­யத்தின் பணிப்­பா­ள­ருமான பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கெக்­கி­ராவ சேனபுற பகு­தியைச் சேர்ந்த இரா­ணுவ வீரரே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் குறித்த இரா­ணுவ வீரர் கட்­டு­நா­யக்க இரா­ணுவ முகாமில் சமிக்ஞை படைப் பிரிவின் கீழ் பணி­யாற்றி வரு­வ­தா­கவும் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­ன­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது, நீர்­கொ­ழும்பில் இருந்து பஸ் வண்டி ஊடாக யுவதி ஒருவர் புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை பஸ் நிலை­யத்தில் வந்து இறங்­கி­யுள்ளார். அமெ­ரிக்க தூது­வ­ரா­ல­யத்தில் பணி­யாற்றும் குறித்த யுவதி பஸ் தரிப்பு நிலை­யத்தில் இருந்து தனது கட­மை­க­ளுக்­காக தூத­ரகம் நோக்கி செல்ல பிறி­தொரு பஸ் வண்­டியில் ஏறு­வ­தற்­காக தயா­ராகி பஸ் நிலையம் ஊடாக நடந்து சென்­றுள்ளார்.

இதன்­போது யுவ­தியை பின் தொடர்ந்­து­வந்த இளைஞன் ஒருவன் யுவ­தியின் கழுத்தில் இருந்த தங்க சங்­கி­லியை பறித்­துக்­கொண்டு ஓட ஆரம்­பித்­துள்ளான். இதன் போது அந்த யுவதி “திருடன் திருடன். சங்­கி­லியை பறித்­துக்­கொண்டு ஓடு­கிறான்.” என கூச்­ச­லிட்டு கத்­தி­யுள்ளார்.

அதன் போது சங்­கி­லியை பறித்த குறித்த இளை­ஞனும் “திருடன் திருடன்” என கூச்­ச­லிட்­டுக்­கொண்டு ஓடி­யுள்ளான். உட­ன­டி­யாக பஸ் நிலை­யத்­தி­லி­ருந்த பய­ணிகள், நேர கண்­கா­ணிப்­பா­ளர்கள், சார­திகள், நடத்­து­நர்கள் என பலர் அந்த இளை­ஞனை துரத்­தி­யுள்­ளனர்.

புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்­தையில் உள்ள பொலிஸ் காவல் அரணின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் பிரி­யந்த உள்­ளிட்ட பொலி­ஸாரும் திரு­டனை துரத்திச் சென்­றுள்­ளனர். இந் நிலையில் திடீ­ரென பஸ் தரிப்பு நிலை­யத்தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த பஸ் ஒன்­றுக்குள் ஏறி உள்ள சந்­தேக நப­ரான இரா­ணுவ வீரர் அங்­கி­ருந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து உறங்­கு­வதை போல நடித்­துள்ளார்.

திரு­டனை துரத்தி சென்ற பொலிஸ் பரி­சோதகர் நெவில் பிரி­யந்த அந்த பஸ் வண்­டிக்குள் ஏறி உறங்­கு­வதை போல நடித்துக் கொண்­டி­ருந்த திரு­டனை கைது செய்­துள்ளார். இத­னை­ய­டுத்து சந்­தேக நப­ரான இரா­ணுவ வீரர் புறக்­கோட்டை பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்து செல்­லப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இந்நி­லையில் சந்­தேக நபர் விழுங்­கி­யி­ருந்த யுவ­தியின் தங்க சங்கிலி பொலிஸ்நிலையத்தில் வைத்து மீட்கப் பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை- கொழும்பு பொலிஸ் மா அதிபர் லலித் பதிரன, கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சில்வா ஆகியோரின் மேற்பார்வையில் புறக்கோட்டை பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்.