2017 ஆம் ஆண்டின், முதல் காலாண்டில் அரசாங்கத்தின் வருமானம், மற்றும் செலவு தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக, அமைச்சர் மங்கள சமர
வீரவினால் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரச வருமானம் 436 பில்லியன் ரூபாவாகும். குறித்த தொகையில் அரச வருமானத்தில் 95% Md 415 பில்லியன் ரூபா வரி பணத்தில் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல்கள் அடங்கிய அறிக்கையானது மாதாந்தம் பெறப்பட்ட வருமானம் மற்றும் செலவு என்ற அடிப்படையில் முழு காலாண்டு தொடர்பாக வேறாக சுட்டிக் காட்டப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.








