உலகின் மிக அசிங்கமான நாய் 

ஹமார்த்தாஹ என்ற மாஸ்டினோ வகை நாய் இந்த ஆண்டு உலகின் ‘அசிங்கமான’ நாயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஹமார்த்தாஹ என்ற மாஸ்டினோ வகை நாய், இந்த ஆண்டின்
29-ஆவது ஆண்டாக இந்த வருடத்தின் போட்டி கலிஃபோர்னியாவின் பெட்டலுமாவில் நடைபெற்றது.

தனது உரிமையாளர் ஷர்லி சிண்ட்லருடன் பங்குபெற்ற மார்த்தா 13 போட்டியாளர்களை தோற்கடித்து வெற்றிபெற்றது. மார்த்தாவிற்கு பரிசாக கோப்பையும், 1500 அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டது.

பார்வையாளர்களை கவர்ந்த, கீழ் தாடையில் அதிக சதைக் கொண்ட மாஸ்டினோ இனத்தைச் சேர்ந்த இந்த நாய், ஊடகங்களில் காட்சியளிப்பதற்காக நியூயார்க்கிற்கு செல்லவுள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்காட்சியில் பங்குபெற்ற நாய்கள், இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் இடங்களிலிருந்தும் நாய்கள் அடைத்து வைக்கப்படும் இடங்களிலிருந்தும் மீட்கப்பட்ட நாய்கள் ஆகும்.

இந்த போட்டி நாய்களை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக என்றும், அன்பான துணையாக இருப்பதால் அவற்றின் உடல்நிலை ஒரு விஷயமல்ல’ என்றும் இந்த போட்டிக்கான வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.