‘அரச குடும்பத்திற்கு வெளியே இருக்க விரும்பினேன்’: இளவரசர் ஹாரி

அரசு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது தொடர்பாக மிகவும் தெளிவாக அறிய வந்த இளவரசர் ஹாரி அதிலிருந்து விலகி இருக்க முடிவு செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுத்துவிடுவதை கருத்தில் கொண்டிருந்த அவர் இறுதியில், அரச குடும்பத்தில் இருக்க வேண்டும். ஆனால், தனக்கென ஒரு பங்கை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

பிரிட்டன் படையோடு இணைந்து பணியாற்றியதுதான் ‘நான் (கோட்டையில் இருந்து) தப்பிக்க இதுவரை கண்டவற்றில் சிறந்த தருணம்’ என்று முடிக்குரிய 5-ஆவது வாரிசாக இருக்கின்ற இளவரசர் ஹாரி ஞாயிற்றுக்கிழமை ‘த மெயில்’ செய்தித்தாளுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

32 வயதாகும் இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தானில் இருமுறை பணியாற்றியது உள்பட 10 ஆண்டுகள் படையில் பணியாற்றியிருக்கிறார்.

இளவரசர் ஹாரி ஆப்கனிஸ்தானில் இருக்கிறார் என்று 2007 ஆம் ஆண்டு ஊடகங்களில் செய்தி வெளியான பின்னர், அங்கிருந்து அவர் வெளியேற வேண்டியதாயிற்று.

‘நான் மிகவும் கோபமடைந்தேன். படையில் பணிபுரிந்ததுதான் நான் அரச குடும்பத்தில் இருந்து தப்பித்து இருக்க கிடைத்த சிறந்த தருணம். நான் எதையோ சாதித்துக் கொண்டிருப்பதாக எண்ணினேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘வேறுபட்ட பின்னணிகளில் இருந்து எல்லாவித மக்களோடும் ஆழமான புரிதலை கொண்டுள்ளேன். ஒரு குழுவின் பகுதியாக இருப்பதை உணர்ந்தேன்’ என்று ஹாரி தெரிவித்திருக்கிறார்.