அங்கஜன் இராமநாதனின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இந்த தேசத்தில் இன்றைய திகதியில் எமது எதிர்பார்ப்புகள் எல்லாம் எமது தேசத்தில் கௌரவமான பிரஜைகளாக இந்த தேசத்தின் நலன்களை முதன்மைப்படுத்துகின்ற சமூகமாக உண்மை நேர்மை மனிதநேயம் நீதி மேலோங்க உழைக்கின்ற சமூகமாக அமைதி சமாதானம் சகவாழ்வு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி காணுகின்ற தேசத்தின் பங்காளிகளாக வாழ்வதேயாகும்.

இதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதுவரைகாலமும் எமது சமூகத்தின் வரலாறு மிகச்சிறப்பான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கின்றது.

என்றாலும் அண்மைக்காலமாக அதன் தோற்றத்தில் மாறுதல்களை ஏற்படுத்த விசமமான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இவற்றை நாம் துல்லியமாக அறிந்துகொள்தல் வேண்டும்

முப்பது நாட்கள் நோன்பிருந்து தொழுகை ஸக்காத் திக்ரு ஸலவாத் மற்றும் குர்ஆன் போன்ற நல்லமல்கள் புரிந்து ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப்பெருநாள் கொண்டாடும் என் இனிய இஸ்லாமிய நெஞ்சங்கள் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் சம உரிமையுடனும் சகவாழ்வுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய பிரார்த்திக்கிறேன்.