சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, சமகால அரசாங்கத்திற்கு ஆபத்து நிலை ஏற்படலாம் என புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது.
சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதல் மேற்கொண்டு கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதனால் எதிர்வரும் காலங்களில் கடும் சவாலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என புலனாய்வு பிரிவை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் சுகாதார அமைச்சிற்குள் நுழைந்தனர்.
இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினால், பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 87 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அமைச்சிற்குள் நுழைந்தமைக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எப்படியிருப்பினும் பல மாதங்களாக கொழும்பில் இடம்பெற்ற சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு 80 வீதமானவை கண்ணீர் புகை, நீர் பிரயோகம் பயன்படுத்தி பொலிஸாரினால் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் நாட்டு மக்கள், நல்லாட்சி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளதாக புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள், பயிற்சி பெற்ற வைத்தியர்கள் மற்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் செயற்படுகின்ற வைத்தியர்கள் உட்பட சுமார் 40000 பேர் இதற்கு நேரடியாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அதற்கு குடும்ப உறுப்பிர்கள் ஆதரவு வழங்குகின்றமையினால் இது எதிர்வரும் காலங்களில் பிரபல விடயமாக மாற்றமடையும் நிலை காணப்படுவதாக புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளதாக, குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.