நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 75 முதல் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளே இவை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பிரதேசத்தில் தற்காலிகமாக கடும் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.