நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ராஜபக்சாக்களுக்கு ஒற்றர் வேலை பார்த்ததாகஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குற்றம்சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதேமேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ள அவர், மேலும் தெரிவிக்கையில்,
தமது கட்சிக்குள் இடம்பெற்ற உள்ளக பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை மஹிந்தராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு உதய கம்மன்பிலவழங்கினார்.
அதுமட்டுமல்ல, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராககளமிறங்கியபோது, ஒப்பந்தம் கைச்சாத்திட்ட சந்தர்ப்பத்திலும் அவர் இருந்தார். ஷ
அத்துடன், மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை திட்டமிடும்போதும்கம்மன்பில உடனிருந்தார்.
ஷஇந்த நிலையில், பின்னர் அவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துகொண்டார். அவர்களின்ஆட்சியில் சிறந்ததொரு அமைச்சுப் பதவியைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பில்கம்மன்பில இருந்தார்.
ஆனால், அவரின் அரசியல் நிலைமை இன்று இப்படியாகியுள்ளது எனநிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.