குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

வடமேல் மாகாணங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மின்சாரம் தயாரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு DAIICHI LAIHTSO GROUP என்ற ஜப்பான் நிறுவனம் முன்வந்துள்ளது.

மாகாண சபை நிறுவனங்களுக்கான பிரதேசத்தில் சேரும் குப்பைகள், மின்சார தயாரிப்புக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்காக குருணாகல், சுந்தராபொல குப்பை கொட்டும் இடத்தை தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் கடந்த 20ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஷமல் சேனரத் ஆகியோரை சந்தித்து இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளனர்.