வேள்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தேசிய நீர்வளங்கல் அதிகார சபையினர் பாடசாலை மாணவர்களுக்கான குடிநீர் தர பரிசோதனை விழிப்பூட்டல் கருத்தமர்வு நேற்றைய தினம் வரணி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இவ்வேலைத்திட்டம் மூலம் பிரதேச குடிநீர் கிணற்று நீர் பரிசோதிக்கப்பட்டு குடிக்க உகந்தவை என சில கிணறுகளுக்கும் பல கிணறுகள் குடிக்க உகந்தவை அல்ல எனவும் பரிசோதனையின் பின்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் வரணிப்பகுதியில் 55 கிணறுகளின் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இவற்றில் 20 மட்டும் குடிக்க உகந்தவை என இனங்காணப்பட்டது. இதில் பெருமளவானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்