அரசாங்கம் அரிசிக்கான போலித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வெளிநாடுகளிலிருந்து அரசியை இறக்குமதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என சம்மேளனத்தின் செயலாளர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
திம்புலாகல மனம்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
இதன் காரணமாகவே அரசாங்கம் விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கவில்லை.
பொலனறுவை விவசாயிகளுக்கு அரசாங்கம் உர மானியங்களை இது வரையில் வழங்கவில்லை.
நீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, உர மனியங்களைத் தடுத்து, அரசாங்கம் திட்டமிட்ட வகையில் இலங்கையில் அரிசிக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றது.
உர மானியங்கள் கிடைக்காவிட்டால் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்படும்.
வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்தால் விவசாய அமைச்சருக்கு தரகுப் பணம் கிடைக்கும்.
அதன் காரணமாகவே அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.