லண்டனில் 27 மாடிக் கட்டிடத்தில்  தீ,  200 வீரர்கள் போராட்டம்

லண்டனில் 27 மாடி கட்டிடத்தில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள கிரன்பெல் டவரில் 27 மாடி கட்டிடத்தில் 2ஆவது தளத்தில் பற்றிய தீ அனைத்து தளங்களுக்கும் பரவி வருகிறது.

தீயை அணைக்க 40 தீயணைப்பு வாகனங்கள், 200 வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். கொளுந்துவிட்டு எரியும் தீயில் இதுவரை 2 பேர் காயமடைந்துள்ளனர் கட்டிடத்தில் உள்ள 120 வீடுகளில் வசித்து வருபவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்த தீ விபத்திற்கு தற்போது வரை காரணம் தெரியவில்லை என்ற போதிலும், இதில் தீவிரவாதிகளின் சதி இருக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது.