தெண்டுல்கர் சாதனையை முறியடித்த தவான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் 78 ரன் எடுத்தார்.

ஐ.சி.சி. நடத்தும் ஒருநாள் போட்டி தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்னை எடுத்த வீரர் என்ற சாதனையை தவான் படைத்தார். அவர் 16 இன்னிங்சில் 1000 ரன்னை கடந்தார்.

இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் 18 இன்னிங்சில் ஆயிரம் ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை ஷிகர் தவான் முறியடித்தார்.

சவுரவ் கங்குலி (இந்தியா), கிப்ஸ் (தென்னாப்பிரிக்கா), மார்க் லாக் (ஆஸ்திரேலியா) ஆகியோர் 20 இன்னிங்சில் 1000 ரன்னை எடுத்து உள்ளனர்.