விலைபோன எம்எல்ஏக்கள்.. நிச்சயம் கல்லறையிலிருந்து எழுந்து வந்துவிடுவார் ஜெ.. கொதிக்கும் குஷ்பு!

எம்எல்ஏக்கள் விலை போனது அம்பலமானதையடுத்து ஆட்சியை கலைக்குமாறு பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக எம்எல்ஏக்கள் டிஆர்பி ராஜா, ஜெ.அன்பழகன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

சசிகலா கோஷ்டிக்கு எம்எல்ஏக்கள் விலைபோன விவகாரத்தை மூன் டிவியும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் நேற்றிரவு அம்பலப்படுத்தியது. இது தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் நடைபெறும் எந்த பிரச்சனைக்கும் பெரிதாக ரியாக்ஷன் காட்டாது வடஇந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள் வரிந்து கட்டிக்கொண்டு எம்எல்ஏக்களின் துரோகத்தை தோலுரித்துக்காட்டின. எம்எல்ஏக்கள் விற்பனைக்கு என்ற ஆஷ்டேக்கும் ட்ரென்ட்டானது.

கொதிக்கும் பிரபலங்கள் இதில் பொதுமக்கள் தவிர திமுக எம்எல்ஏக்கள் மற்றும் சில பிரபலங்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு தமிழக எம்எல்ஏக்கள் மாநிலத்தின் மானத்தை வாங்கிவிட்டனர் என கொதித்தனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.. பாஜகவுக்கும் பங்கு உண்டு திமுக எம்எல்ஏவான டிஆர்பி ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கவர்னர் ரகசிய வாக்கெடுப்புக்கு அழைத்திருந்தால் ஜனநாயகத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த அவமானத்தை தடுத்திருக்கலாம் என கூறியுள்ளார். மேலும் இந்த குற்றத்தில் பாஜகவுக்கும் பங்கு உண்டு என அவர் கூறியுள்ளார். மீண்டும் தமிழகத்திற்கு அவமானம் தனது மற்றொரு டிவீட்டில் மீண்டும் தமிழகத்திற்கு அவமானம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவுக்கு மானம் இருந்தால் இப்போது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு தெளிவாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பணத்திற்காக, பணத்தால் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனும் தனது டிவிட்டர் பக்கத்தில் எம்எல்ஏக்கள் விலைபோனது குறித்து டிவிட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, அரசு என்பது மக்களால், மக்களுக்காக இருக்க வேண்டும்.

ஆனால் அதிமுக அரசு பணத்திற்காக, பணத்தால் உள்ளது என குறிப்பிட்டுள்ளது. கல்லறையில் இருந்து.. இதேபோல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவும் எம்எல்ஏக்கள் விலை போனது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவினரால் நம் மாநிலத்திற்கு அவமானத்தை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.

மறைந்த முன்னாள் முதல்வர் நிச்சயம் அவரது கல்லறையில் இருந்து எழுந்து வந்துவிடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.