அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியல் வெளியானது!!

போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் 21 நாடுகளை சேர்ந்த 100 விளையாட்டு வீரர்கள் பரிசீலிக்கப்பட்டாலும் அமெரிக்காவை சேர்ந்த வீரர்களே அதிகம் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார், இவர் சம்பாதித்தது 93 மில்லியன் டொலர்களாகும்.

அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (86.2 மில்லியன் டொலர்கள்), அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி (80 மில்லியன் டொலர்கள்), டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் (64 மில்லியன் டொலர்கள்) உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மட்டுமே, 51வது இடத்தில் நீடிக்கிறார்.