ஹுசைனின் பரிந்துரைகளை அல்ல! ஐ. நாவின் பிரேரணைகளேயே இலங்கை ஏற்றது: மங்கள

இலங்கை தொடர்பான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைனிடம் உறுதியளிக்கவில்லை என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இந்த விடயத்தை அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிந்துரைகள் இந்த வருடம் மார்ச் மாதத்தில் முன்வைக்கப்பட்டன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இணங்கியது.

எனினும் அல் ஹுசைனின் பரிந்துரைகளுக்கு அரசாங்கம் இணங்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

போர்க்குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளுக்கு அரசாங்கம் இணங்கவில்லை. அதற்கு பதிலாக உள்ளூர் விசாரணைகளையே அரசாங்கம் முன்னிலைப்படுத்தியது.

இதேவேளை சிலப்பிரிவினரால் இலங்கையின் படைத்தரப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பிரிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தநிலையில் மஹிந்த தரப்பினர் நாட்டு மக்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.