போதையை ஒழிப்போம் விழிப்புணர்வு பேரணி

தூய்மையான கோப்பாய் மத்தி செயற்திட்டத்தின் 9 ஆம் கட்ட நிகழ்வாக ‘போதையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் கிராம மட்ட விழிப்புணர்வு பேரணியும் கருத்தரங்கு நிகழ்வும் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோப்பாய் மத்தி கிராம சேவகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது.
கோப்பாய் மத்தி வள்ளியம்மன் சனசமூக நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட இப் பேரணி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி வரை சென்று போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வுகளும் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றன.

கோப்பாய் மத்தி கிராம சேவகர் க.அனுஜன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மேலதிக அரச அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் யாழ்மாவட்ட சிறுவார் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரி கு.கௌதமன் வலிகிழக்கு பிரதேச செயலக வாழ்வின் எளிச்சி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி வசந்தி கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யாழ்ப்பண தேசிய கல்வியியற்கல்லூரி விரிவுரையாளர்கள் கோப்பாய் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தேசிய கல்வியியற்றகல்லூரி ஆசிரிய மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான சுலோகங்களை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் பேரணியாக சென்றனர்.

அதனைத்தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விளிப்புணர்வு கருத்தரங்கும் நாடகமும் இடம்பெற்றன