தனி சிங்களம் சட்டம் முன்மொழியப்பட்டமையே நாட்டில் பல்வேறு போராட்டங்கள் வெடிக்க காரணம்

இந்த நாட்டில் முதன் முறையாக தனி சிங்கள சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்மொழியப்பட்டது அதில் இருந்து தான் நாட்டில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். இன்று(05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தங்கள் ஐரோப்பியரிடம் இழந்த சுதந்திரத்தை பெறுவதங்கான ஆரம்பம். அந்த தனி சிங்கள சட்டம் தான் நாட்டின் பிளவை பிரிவை தோற்றுவித்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.