தேசிய விருது இயக்குநருடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான `சரவணன் இருக்க பயமேன்’ வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், உதயநிதி தற்போது `பெதுவாக என் மனசு தங்கம்’, `இப்படை வெல்லும்’ ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக தேசிய விருது இயக்குநருடன் உதயநிதி இணையவிருக்கிறார்.

தமிழில் வெளியான `காஞ்சிவரம்’ என்ற படத்திற்காக தேசிய விருது வென்ற பிரியதர்ஷன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் உதயநிதி நடிக்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை உதயநிதியே அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

“தனது அடுத்த படத்தில் பிரியதர்ஷனின் இயக்கத்தில் நடிக்க இருப்பதில் மகிழ்ச்சி. அந்த படத்தை மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திலீஷ் போத்தன் இயக்கத்தில், கடந்த ஆண்டு மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற படம் `மகேஷின்ட பிரதிகாரம்’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.