பந்துவீச அதிக நேரம்: இலங்கை தற்காலிக கேப்டன் உபுல்தரங்கா ‘சஸ்பெண்டு’

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 98 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை. அவருக்கு பதிலாக துணை கேப்டனான உபூல் தரங்கா தற்காலிக கேப்டனாக பணியாற்றினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் மெதுவாக பந்து வீசினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் 50 ஓவரை அவர்கள் வீசி முடிக்கவில்லை. அந்த நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாக வீசினர். 50 ஓவரை வீச இலங்கை அணிக்கு 4 மணி நேரத்துக்கும் மேலானது.

இதைத் தொடர்ந்து தற்காலிக கேப்டன் உபூல் தரங்கா மீது, மேட்ச் நடுவர் டேவிட்பூன் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். 2 போட்டியில் விளையாட அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது. இது இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.