அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.
சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களை எதிர்நோக்கிய மக்களுக்கு ஐந்து கோடியே 10 லட்சம் ரூபா நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவு அமைப்பின் ஆணையாளர், கிறிஸ்ரோஸ் ஸ்ரைலியனைட்ஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை பெற்று கொண்டுக்க நிதி வழங்கப்படள்ளது.
அதிக அளவில் பாதிப்படைந்த தென் மற்றும் மேல் மாகாண மக்களின் தேவைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் விடுத்துள்ள வேண்டுகோளின் அடிப்படையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.