தர்பூசணி பழத்தில் லைகோபீன், பொட்டாசியம், நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் பலவித ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்களை கொண்ட தர்பூசணி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுத்தாலும், அதை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?
தர்பூசணி பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக் கூடாது ஏன்?
- தர்பூசணியில் 96% நீர் இருக்கிறது, எனவே அதை சாப்பிட்ட பின் நீர் குடித்தால், ஜீரண உறுப்புகளில் சுரக்கும் என்சைம் திரவம் அடர்த்தி குறைந்து அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனைகளை உண்டாகும்.
- தர்பூசணியில் நீர் மற்றும் ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரை இருப்பதால், அதை சாப்பிட்ட பின் நீர் குடித்தால், அது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
- தர்பூசணியில் உள்ள சர்க்கரை மற்றும் நீர், நமது உடலின் செயல்பாட்டிற்கு பயன்படுகிறது. எனவே அதனை சாப்பிட்ட பிறகு நீர் குடித்தால், அது நல்ல பாக்டீரியாக்களை அடித்துச் செல்லப்பட்டு, செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
- தர்பூசணி பழத்துடன் எந்தவொரு உணவுப் பொருட்களையுமே சேர்த்து சாப்பிடக் கூடாது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஏனெனில் அது ஜீரண சக்தியை குறைத்து, அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துவிடும்.
குறிப்பு
ஜீரண பிரச்சனை இருப்பவர்கள், தர்பூசணியை சாப்பிட்ட பின் நீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளை உணரக்கூடும்.