சீன அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களுடன் சீனக்கடற்படையினரின் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
இலங்கையின் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
அத்துடன் குறித்த கப்பல்களில் வருகை தந்துள்ள மருத்துவர்கள் குழுவினர் தங்களுடன் எடுத்து வந்துள்ள பத்து சிறிய படகுகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து செயற்படவுள்ளனர்.
சீனாவிலிருந்து வருகை தந்துள்ள சேன்சூன், ஜின்ஸோவ், சாஓஹூ ஆகிய மூன்று கப்பல்களுக்கும் கடற்படையினரின் சம்பிரதாயப்படி இலங்கைக் கடற்படையினர் வரவேற்பு அளித்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.







