இலங்கையில் இயற்கையின் கோரத் தாண்டவம் : வரைபடங்களை வெளியிட்டது அரசாங்கம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வரைபடங்களை வெளியிட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தம் காரணமாக தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்று படங்களை வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மாகாணங்களில், வெள்ளம் காரணமாக நெருங்க முடியாத வீதிகள் மற்றும் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளின் வரைபடங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஐந்து நாட்கள் கடந்துள்ளன. இதுவரையான காலப்பகுதியில் 201 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

15 மாவட்டங்களை சேர்ந்த 575,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.