நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார் என்று நடிகையும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஜெயபிரதா கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு மற்றும் அரசியல் பிரவேசத்தை பல பிரபலங்கள் ஆதரித்தும் எதிர்த்தும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகையும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஜெயபிரதா, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரஜினி அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக சாதிப்பார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் உயர்ந்த நிலையில் இருந்தாலும் எளிமையாக இருப்பவர். அவரால் அரசியலிலும் வெற்றி பெற முடியும்.
ஆனால், நடிகர் சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கிவிட்டு பின்வாங்கியது போல ஆகிவிடக்கூடாது” என்றும் அறிவுரை கூறியுள்ளார்..







