தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
அதிமுக அம்மா அணியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் திடீரென்று தனி அணியாக சென்று முதல்வரை அண்மையில் சந்தித்துப் பேசினார்கள். அப்போதுஇ விரைவில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
எம்எல்ஏக்கள் தனித்தனி அணியாக சென்று முதல்வரை சந்தித்து பேசியதை அடுத்து அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் கூடும் என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படிஇ இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாகஇ முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மே 2-ம் தேதி தலைமை செயலகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்த பரபரப்பான சூழலில் அமைச்சரவைக் கூடுவது என்பதை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







