தமிழ்நாட்டில் உள்ள கோவையில் அமைந்துள்ள ஆரிய வைத்திய சாலையில் புத்துணர்வு சிகிச்சைக்காக ஓ.பி.எஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியதிலிருந்தே பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.
தனது வீட்டில் தினமும் தொண்டர்களை சந்தித்து வந்த அவர் பின்னர் ஆர்.கே நகர் பிரசாரத்தில் முழு மூச்சுடன் இறங்கினார்.
அதன் பின்னர் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அவர்களிடத்தில் சென்று சந்திக்கும் விதமாக ஓ.பி.எஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார்.
இதனிடையில், கடந்த வாரம் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தும் அவர் பேசினார்.
இப்படியாகக் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக, இடைவிடாத அரசியல் பயணம், தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் சந்திப்பு என ஓ.பி.எஸ் தீவிரமாக இயங்கி வருகிறார்.
இதனால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது உடல் சோர்வை நீக்கும் வகையில், கோவையில் உள்ள ஆரிய வைத்தியசாலையில், ஓ.பி.எஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு இரு நாட்கள் தங்கியிருந்து அவர் புத்துணர்வு சிகிச்சைகள் பெற உள்ளதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







