புனே அணியில் டோனியுடன் விளையாடுவது எங்கள் அதிர்ஷ்டம்: ஜெய்தேவ் உனட்கட்

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் தகுதி பெற்று உள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் 11 ஆட்டத்தில் 22 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

புனே அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளார். அவர் கூறியதாவது:-

நெருக்கடியான நேரத்தில் என்னை கேப்டன் அழைத்து பந்துவீச சொல்வதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்று செயல்பட்டேன். அது போன்ற வாய்ப்பை பெற்றது எனது அதிர்ஷ்டம் என உணர்கிறேன்.

என்னுடைய பந்து வீச்சு நன்றாக வேலை செய்கிறது. கடந்த 2 சீசனில் போதுமான போட்டியில் நான் விளையாடவில்லை. ஆனால் இந்த முறையும் அந்த வாய்ப்பை பெற்று உள்ளேன்.

அணியின் வெற்றிக்கு முக்கியமான கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

டோனி, ஸ்டீபன் சுமித் மிக சிறந்த வீரர்கள் கேப்டன்கள். இருவரும் தங்கள் நாட்டுக்காக பெருமை சேர்த்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து விளையாடுவதால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.